சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ’கங்குவா’. பான் இந்திய அளவில் 5டி தொழில்நுட்பத்தில் பத்து மொழிகளில் வெளியாக உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கிறது.
’கங்குவா’ என்றால் நெருப்பின் கங்கு போல கோபமும், வீரமும் உடைய வீரன் என்று அர்த்தம் வரும் எனவும் படத்தின் தலைப்பை அறிவித்து படக்குழு தெரிவித்தது. படத்தில் டைட்டில் கிளிம்ப்ஸ், முதல் லுக் போன்றவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்காக, மணிக்கணக்கில் சூர்யா மேக்கப் போட்டதாகவும் சொல்லப்பட்டது.
அதில் அவர், ‘’ ‘கங்குவா’ படத்தில் எனக்கான போர்ஷன் முடிந்து விட்டது. மொத்த யூனிட்டும் மிகவும் பாசிட்டிவாக உள்ளார்கள். ஒன்றை முடிப்பது என்பதும் பலவற்றின் புதிய தொடக்கமாகக் கருதுகிறேன். இயக்குநருக்கும், படக்குழுவுக்கும் நன்றி. ‘கங்குவா’ எப்போதுமே எனக்கு ஸ்பெஷல்! உங்கள் அனைவருக்கும் திரையரங்குகளில் காட்ட ஆவலாக உள்ளேன். இந்தப் படக்குழு எனக்கு குடும்பம் போல’ எனக் கூறியுள்ளார்.
கையில் வாளேந்தி, கோபமான பார்வையுடன் அவர் பகிர்ந்துள்ள இந்தப் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.