Skip to content
Home » “கங்குவா” படக்குழுவினரை பாராட்டிய நடிகர் மாதவன்!….

“கங்குவா” படக்குழுவினரை பாராட்டிய நடிகர் மாதவன்!….

நடிகர் மாதவன் தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் கடைசியாக சைத்தான் எனும் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அடுத்தது தமிழில் டெஸ்ட், அதிர்ஷ்டசாலி போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கங்குவா படக்குழுவினரை பாராட்டி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கங்குவா படத்தை திரையில் பார்த்தேன். உங்கள் முயற்சிகளையும் அர்ப்பணிப்பையும் கண்டு வியப்படைந்தேன் மை டியர் பிரதர். சூர்யா, நீங்கள் செய்ததில் பாதியையாவது நான் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகியிருந்த கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருந்தார். வெற்றி பழனிசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் திரைப்பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *