நடிகையும் இயக்குநருமான கங்கனா ரனாவத், தற்போது இமாச்சலப் பிரதேச மண்டி தொகுதி பாஜக எம்பியாக உள்ளார். இவர், அவ்வப்போது சர்ச்சைப் பேச்சுகளில் சிக்கி இணையத்தில் வைரலாவது உண்டு. சமீபத்தில் அவர் இயக்கி நடித்த ‘எமர்ஜென்சி’ படம் வெளியானது. இதற்கு பல்வேறு இடங்களில் கிளம்பியது. இந்த நிலையில், கங்கனா ரனாவத், காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி உணவகம் ஒன்றைத் திறக்க உள்ளார். இதுகுறித்த அறிவிப்பை தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதுகுறித்த பதிவில், ”ஹிமாச்சலில் உள்ள இமயமலையில், ‘தி மவுண்டன் ஸ்டோரி’ என்கிற உணவகத்தை, காதலர் தினத்தன்று திறக்க உள்ளேன். இதன்மூலம் ஒரு குழந்தையின் கனவு உயிர் பெறுகிறது. தவிர, இது ஒரு இமயமலையின் காதல் கதை” எனப் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், மும்பை மற்றும் மணாலியில் உள்ள கங்கனாவின் வணிகத்தில் பணியாற்றிய ஷப்னம் குப்தா வடிவமைத்த கஃபே-கம்-ரெஸ்டாரண்டின் விவரங்களைப் பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் வடிவமைப்பு இப்போதே பார்வையாளர்களைக் கவர்கிறது.