வரும் மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளர் கருப்பையா போட்டியிடுகிறார். இவர் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஶ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூர், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வேட்பாளர் கருப்பையாவிற்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று கந்தர்வகோட்டை பகுதியில் முன்னாள் அமைச்சர்
விஜயபாஸ்கருடன், வேட்பாளர் கருப்பையா சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதில் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மங்கனூர் கிராமத்தில் வாக்கு சேகரிக்க சென்ற போது அங்குள்ள பெண்கள் கோலாட்டம் ஆடி வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வேட்பாளர் கருப்பையாவும் பெண்களுடன் சேர்ந்து கோலாட்டம் ஆடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இது அப்பகுதி மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.