விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம், என்.ஆர் பாளையம் காலனியில் வசித்து வருபவர் கருணாமூர்த்தி. இவரும் பண்ரூட்டி, பாலூர் காலனியில் வசித்து வந்த சுவேதா (21) இருவரும் கடந்த ஜூலை மாதம் காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்னர் கருணா செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். கருணாவின் தந்தை பாண்டியனும் வெளியூரில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இதனால் மாமியார் ரமணி, மருமகள் சுவேதா ஆகியோர் என்.ஆர் பாளையம் இல்லத்தில் இருக்கின்றனர். கடந்த 30ம் தேதி தீபாவளிக்கு முன்தினம், இரவு சுமார் 10 மணியளவில் ரமணி மர்மமான வகையில் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாயின் மரணத்தில் மர்மம் இருப்பதாக, தம்பதியின் இளைய மகன் தட்சணாமூர்த்தி கண்டமங்கலம் போலீசில் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் போலீசார் மருமகள் சுவேதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, சுவேதா தனது கள்ளக்காதலருடன் சேர்ந்து மாமியாரை பெட்ரோல் ஊற்றி கொன்ற அதிர்ச்சி வெளியானது. இது தொடர்பாக மருமகள் சுவேதா அளித்த வாக்குமூலம்..
திருமணத்திற்கு பின்னர் கணவர் வெளியூரில் தங்கி வேலை பார்க்க, வீட்டில் நானும் – மாமியாரும் இருந்தோம். 2 மாதங்களுக்கு முன், எதிர்வீட்டில் வசித்து வந்த ஓட்டுநர் சதீஷ் குமாருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் தனிமையில் இருந்தோம். எனது மாமியார் ராணி கூலி வேலைக்கு சென்று மாலை நேரத்தில் வீடு திரும்புவார், சில நேரத்தில் வெளியூரில் தங்கியிருந்து வேலை செய்து வருவார்.
கிடைத்த சந்தர்ப்பங்களில் நாங்கள் உல்லாசமாக இருந்து வந்தோம். இதனிடையே, தீபாவளிக்கு முன்பு நாங்கள் உல்லாசமாக இருந்ததை மாமியார் நேரில் பார்த்து கண்டித்தார். கடுமையான வார்த்தையால் தீட்டியவர், தீபாவளிக்கு ஊருக்கு வரும் மகனிடம் சொல்வதாகவும் கூறினார். இதனை நான் சதீஷிடம் சொல்ல, அவர் ரமணியை கொன்றுவிடலாம் என கூறினார். மாமியாரை பேசி வெளியே அழைத்துச் சென்று, தீபாவளிக்கு துணிகள் எடுத்துவிட்டு, ஹோட்டலில் ப்ரைடு ரைஸ் வாங்கிவிட்டு இரவு 8 மணிக்கு வீட்டிற்கு வந்தோம். நான் முன்னதாகவே உரக்க மாத்திரையை வாங்கி வைத்திருந்து, அதனை பொடியாக்கி பிரைடு ரைஸில் கலந்து மாமியாருக்கு கொடுத்தேன். சாப்பிட்ட அவர் உறங்கியதும், சதீஷை வீட்டிற்கு வரவழைத்து பெட்ரோல் ஊற்றி எரித்தோம் என கூறியுள்ளார். இதன் அடிப்படையில் சுவேதா மற்றும் கள்ளக்காதலன் சதீஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்…