புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, வயலோகம் தர்கா குளம் அருகே தண்ணீர் குடித்து விட்டு சென்ற மானை நாய்கள் விரட்டியதால் கம்பி வேலியில் சிக்கி கால் உடைந்து காயமடைந்தது . இது சம்பந்தமாக
பொதுமக்கள்தகவல் தெரிவித்து விஏஓ முன்னிலையில் வனத்துறை அதிகாரிகள் வசம் காயமடைந்த மானை சிகிச்சைக்காக ஒப்படைத்தனர். இலுப்பூர் தாலுகா புல்வயல் நிலையப்பட்டி வயலோகம் அண்ணா பண்ணை பகுதிகளில் மான்கள் அதிகம் காணப்படுகிறது வறட்சியால் தண்ணீர் தேடி குளம் குட்டைகளுக்கு வரும் மான்கள் வாகன விபத்துகளிலும் சமூக விரோதிகள் வேட்டையாடுவதாலும் நாய்கள் விரட்டி கடித்து குதறுவதாலும் மான்கள் அதிகமாக இறந்து விடுகிறது இவற்றை பலமுறை சுட்டிக்காட்டி மான்கள் சரணாலயம் அண்ணா பண்ணை வளாகத்திற்குள் அமைத்து மான்களுக்கு குடிநீர் வசதி ஏற்பாடு செய்து மான்களை பாதுகாக்க வலியுறுத்தி பல மனுக்கள் நேரிலும் whatsapp மூலமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் இதுவரை அவற்றை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் வனத்துறையால் எடுத்ததாக தெரியவில்லை எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் சமூக நலனில் அக்கறை கொண்ட வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இவற்றைக் கவனத்தில் கொண்டு புள்ளிமான்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் படி அப்பகுதி மக்கள் கோரி்க்கை வைத்துள்ளனர்.