சிராஜுல் மில்லத் அப்துல் சமது தமிழ்ப் பேரவை மற்றும் ராஜகிரி தாவுது பாட்ஷா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை சார்பில் கம்பனின் கவிநயம் எனும் தலைப்பில் கவியரங்கம் பாபநாசம் ஆர்.டி.பி கல்லூரியில் நடந்தது. தமிழ்த் துறை தலைவர் கோகிலா தேவி வரவேற்றார். ஆர்.டி.பி கல்வி குழும இயக்குனர் காரல் மார்க்ஸ், கல்லூரி முதல்வர் முகமது முகைதீன் முன்னிலை வகித்தனர். கோவிந்தகுடி இளைஞர் நற்பணி மன்ற மேல் நிலைப் பள்ளித் தாளாளர் அப்துல் லத்தீப் கலந்துக் கொண்டு பேசும் போது தமிழில் பிழை இன்றி பேச வேண்டும், எழுத வேண்டும். மாணவர்கள் தங்களுடைய தனித் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலக தமிழ் ஓலைச்சுவடி துறைத் தலைவர் மணி மாறன் கலந்துக் கொண்டு பேசும் போது ஓலைச் சுவடி நம் நாட்டில் பயன்படுவதை விட, லண்டனில் நம் ஓலைச்சுவடி மற்றும் கல்வெட்டை பயன்படுத்தித் தான் வானிலையை கணித்து சொல்வர். தமிழ் நாட்டில் ஓலைச் சுவடியை பயன்படுத்த வேண்டும் என்றார். மாணவ, மாணவிகள் தங்கள் கவிதை திறனை வெளிப்படுத்தினர். இன்றையச் சூழலில் மாணவர்களின் வாழ்க்கையை பெரிதும் பாதிப்பது இணையதளமா? அல்லது சினிமாவா? எனும் தலைப்பில் பட்டி மன்றம் நடந்தது. ஆர்.டி.பி கல்விக் குழும செயல் தலைவர் அகமது ராஜா, கல்லூரி துணை முதல்வர் தங்க மலர் உள்பட அனைத்துத் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர். தமிழ் துறைப் பேராசிரியர் சசிகலா நன்றி கூறினார்.
பாபநாசம் ஆர்டிபி கல்லூரியில் கம்பனின் கவிநயம் என்ற தலைப்பில் கவியரங்கம்…
- by Authour