பெருந்தலைவர் காமராஜரின் 122வது பிறந்த தினம் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. திருச்சியில் திமு கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு தலைமையில் திமுகவினர் பெருந்தலைவர் காமராஜர் 122 வது பிறந்த நாளை கொண்டாடினர்.
இதையொட்டி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜரின் திருஉருவ சிலைக்கு அமைச்சர் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி மாநகராட்சி மேயர் அன்பழகன், டோல்கேட் சுப்பிரமணி, பகுதி செயலாளர் மோகன் தாஸ் , கமல் முஸ்தபா, நாகராஜன், இளங்கோ, தொமுச குணசேகர், கிராப்பட்டி செல்வம், கருமண்டபம் சுரேஷ் ,சர்ச்சில் ,பரமசிவம் கருத்து கதிரேசன், உட்பட திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்