திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் 7 மாடி கட்டிடத்தில் பிரமாண்டமான நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைய உள்ளது. ரூ.290 கோடியில் 1.97 லட்சம் சதுரஅடி பரப்பில், அமையும் இந்த நூலகத்துக்கு கடந்த மாதம் 21ம் தேதி முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்த நூலகத்துக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த நூலகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என இன்று சட்டமன்றத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். நூலகப்பணிகள் வேகமாக நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
திருச்சி நூலகத்துக்கு காமராஜர் பெயர் -முதல்வர் அறிவிப்பு
- by Authour
