கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 121 வது பிறந்த நாளையொட்டி நாகையில் இன்று தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் குடும்ப பெண்களுக்கு தக்காளி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.வெளிப்பாளையம் சிவன் தெற்கு வீதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் சுகுமாரன் உள்ளிட்ட விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். அப்போது நீண்ட வரிசையில் காத்திருந்த அப்பகுதி குடும்ப இல்லத்தரசிகளுக்கு ஒவ்வொருவருக்கும் தலா 1/2,கிலோ தக்காளியை விஜய் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் சுகுமாரன் வழங்கினார். தமிழகத்தில் தக்காளி விலை விஷம்போல் ஏறி உள்ளதால், ஏழைகளுக்கு
எட்டாக்கனியாகி உள்ள தக்காளி தற்போது விஜய் மக்கள் இயக்கத்தினரின் மூலம் இலவசமாக கிடைத்ததால் அதனை மன மகிழ்ச்சியுடன் அப்பகுதிவாசிகள் பெற்றுச் சென்றனர். முன்னதாக பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு நாகை மாவட்டம் திருமருகல் அடுத்த சியாத்தமங்கையில் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்த விஜய் மக்கள் இயக்கத்தினர் புறாக்கிராமம் தொடக்கப் பள்ளி மாணவர்கள் ஆயிரம் பேருக்கு நோட்டு, பேனா, பென்சில், மிட்டாய் வழங்கி கல்விக்கண் திறந்த காமராஜரின் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.