மறைந்த முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 121ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. காமராஜரின் பிறந்த நாள் ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி தினமாக தமிழ்நாடு அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் முழு வேலை நாளாக இயங்கும் என்றும் காமராஜரின் பிறந்தநாளில் ஓவியப்போட்டி, கவிதை போட்டி, கட்டுரைப்போட்டி ஆகியவற்றை நடத்தி மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பெருந்தலைவர் காமராஜரின் 121 வது பிறந்த நாளை ஒட்டி சென்னை நங்கநல்லூர் நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழாவில் பங்கேற்று காமராஜரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இந்த விழாவில் அமைச்சர்கள் அன்பரசன், பொன்முடி, மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.