தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள்- கல்வி வளர்ச்சி நாளாக தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே கோயில் தேவராயன் பேட்டை ஸ்ரீ நடராஜா உதவிப் பெறும் தொடக்கப் பள்ளியில் நடைப் பெற்றது. பாபநாசம் லயன்ஸ் கிளப் மாவட்டத் தலைவர் முத்தமிழ்ச் செல்வம் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் சுகன்யா வரவேற்றார். காமராஜரைப் பற்றி மாணவர்கள் பேசினர். லயன்ஸ் கிளப் சார்பில் பள்ளிக்கு பாய், மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில், இனிப்பு வழங்கப் பட்டது. இதில் லயன்ஸ் கிளப் தலைவர் ராஜா முகமது, செயலர் ஜெகதீசன், பொருளாளர் ஜோதி, மாவட்டத் தலைவர்கள் ஆறுமுகம், சம்பந்தம், செல்வராஜன், சாப்ஜான், முன்னாள் செயலர் நவநீத கிருஷ்ணன், பள்ளி ஆசிரியை சுதா உட்பட பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். இதேப் போன்று பாபநாசம் வங்காரம் பேட்டை அரசு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள். கல்வி வளர்ச்சி நாளாக நடைப் பெற்றது. இதில் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம் போட்டி நடத்தப் பெற்று பரிசு வழங்கப் பட்டது. இதில் பள்ளித் தலைமையாசிரியர் கிருஷ்ண மூர்த்தி, ஆசிரியைகள் தீபா, தையல் நாயகி உட்பட பங்கேற்றனர். இதேப் போன்று பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள்- கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு நோட்டு, பேனா வழங்கப் பட்டது. இதில் பள்ளித் தலைமையாசிரியர் ரமேஷ், ஆசிரியை அழுதா உட்பட பங்கேற்றனர். பட விளக்கம்: காமராஜர் பிறந்த நாள்- கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் கோயில் கோயில் தேவராயன் பேட்டை ஸ்ரீ நடராஜா உதவிப் பெறும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பாய், நோட், பேனா, பென்சில் வழங்கப் பட்டது.