அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் ஆகியோர் நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பைடன் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக இருந்தார். அதன் பின்னர் அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து அவர் விலகியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த வாரம் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்தச் சூழலில்தான் பென்சில்வேனியாவில் வரும் செப்டம்பர் 10-ம் தேதி நடைபெறும் விவாத நிகழ்வில் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்க உள்ளனர்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேரடி விவாதத்தில் பங்கேற்பது வழக்கம்.