அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் அமெரிக்க தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், கமலா குறித்து தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:
இன்று அமெரிக்கா பார்க்கும் ஒரு சிறந்த நிர்வாகி கமலா ஹாரிஸ். அவரிடம் நேர்மையும், தைரியமும் உள்ளது. அசாதரண சூழ்நிலையிலும் அவர் ஒரு வரலாற்று பிரசாரத்தை முன்னெடுத்தார். தொடர்ந்து மக்களுக்காக போராடுவார். 2020ல் நான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட போது, கமலாவை துணை ஜனாதிபதியாக, தேர்ந்தெடுத்தது தான் நான் எடுத்த முதல முடிவு. அதுவே எனது சிறந்த முடிவு.
கமலா ஹாரிஸ் தொடர்ந்து உரிய நோக்கத்துடனும், உறுதியுடனும், மகிழ்ச்சியுடனும் அரசை எதிர்த்து குரல்கொடுப்பார். அனைத்து அமெரிக்க மக்களுக்கும் ஒரு சிறந்த சாம்பியன் ஷிப்பாக இருப்பார். எல்லாவற்றிக்கும் மேலாக அமெரிக்காவின் எதிர்காலத்தில் முத்திரை பதிக்கும்போது அடுத்த தலைமுறையினர் எதிர்பாக்கும் ஒரு சிறந்த தலைவராக கமலா ஹாரிஸ் இருப்பார் என பதிவிட்டுள்ளார்.