கூத்துப் பட்டறையில் பயிற்சி பெற்று பல்வேறு நாடகங்களில் நடித்திருந்த வினோதினி, தமிழ் சினிமாவில்‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து‘ஜிகிர்தண்டா, ஒகே கண்மணி உள்ளிட்ட படங்களிக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் அவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் ஐஸ்வர்யா ராயின் தோழியாக நடித்து கவனம் பெற்றார்.
சமீபகாலமாக ட்விட்டர் சமூக வலைதளங்களில் சர்காஸ்டிக்கான அரசியல் ரீதியான பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வந்தார். அவரது பல்வேறு அரசியல் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பேசு பொருளாகின. இந்த நிலையில், நேற்று (ஜூன் 13) நடிகை வினோதினி , கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவையும் போடிருக்கிறார்.