Skip to content
Home » தெருவுக்கு எஸ்.பி.பி. பெயர் சூட்டிய முதல்வர் ஸ்டாலினுக்கு….. கமல் நன்றி

தெருவுக்கு எஸ்.பி.பி. பெயர் சூட்டிய முதல்வர் ஸ்டாலினுக்கு….. கமல் நன்றி

  • by Senthil

ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியதட,  இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் 40 ஆயிரத்துக்கும் மேலான  திரைப்பட பாடல்களை பாடி உள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது 4-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், சென்னையில் அவரது இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை என பெயர் சூட்டப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில், இந்த அறிவிப்புக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “ஒப்பற்ற இசைக் கலைஞரும் எனது மூத்த சகோதரருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் பெயரை, சென்னையில் அவர் வாழ்ந்த தெருவிற்கு சூட்டி அறிவித்திருக்கிறார் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். லட்சக்கணக்கான கலை ஆர்வலர்களின் மனதில் இன்றும் வாழும் ஒரு பெரும் கலைஞனுக்குச் செய்யப்பட்டுஇருக்கும் மரியாதை இது. பாலு அண்ணாவின் ரசிகர் கூட்டத்தில் ஒருவனாக என் பாராட்டுகளும் நன்றியறிதல்களும் தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு உரித்தாகட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!