ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி தேர்தல் நடக்கிறது. இங்கு திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார். அதைத்தொடர்ந்து மநீம, கட்சி அவருக்கு ஆதரவு அளித்துள்ளது. அத்துடன் பிரசாரம் செய்யவும் கமல் முடிவு செய்துள்ளார். அதன்படி வரும் 19ம் தேதி கமல்ஹாசன், ஈரோடு கிழக்கில், காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து வீதிவீதியாக பிரசாரம் செய்கிறார்.