தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் கால்நடைகளுக்கு இலம்பி நோய் பரவுவதை தடுக்கும் வகையில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி தஞ்சை மாவட்டம் குருங்குளம் பகுதியில் கால்நடைகளுக்கு இலம்பி நோய் தடுப்பூசி போடப்பட்டது. கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் முகாமை தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார். கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் சையத் அலி முன்னிலையில் கால்நடை மருத்துவர் செரீப் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் அந்தோணி, ஜெயந்தி, ஞானசேகரன்
மற்றும் மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு 400-க்கும் அதிகமான கால்நடைகளுக்கு இலம்பி நோய் தடுப்பூசியை செலுத்தினர்.
இதுகுறித்து கால்நடை உதவி மருத்துவர் செரீப் கூறுகையில், நாஞ்சிக்கோட்டை மற்றும் ஏழுப்பட்டி கால்நடை மருந்தகத்துக்கு உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் தொடர்ந்து பத்து நாட்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படும் என்றார்.