பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தழுதாழை ஊராட்சியில், கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் நடத்தப்பட்ட கால்நடைகளுக்கான சுகாதார முறைகள் மற்றும் கால்நடை வளர்ப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாமினை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் இன்று (07.10.2023) துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
அதனைத்தொடர்ந்து, அதிக பால் உற்பத்தி செய்து வழங்கிய மாடுகளின் உரிமையாளர்கள் 3 நபர்களுக்கு சிறந்த மேலாண்மைக்கான விருதுகளையும், 03 நபர்களுக்கு சிறந்த கன்று வளர்ப்புக்கான விருதுகளையும்,
பயனாளிகளுக்கு பால் கொள்கலன்கள், தாது உப்புகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்கள்.
தொடர்ந்து நடைபெற்ற கால்நடைகளுக்கான நோய்கள் மற்றும் தீவன அபிவிருத்தி குறித்த விழிப்புணர்வு கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். இந்நிகழ்வில், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் க.இராமலிங்கம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பாஸ்கர், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்கள் மரு.த.குணசேகர், மரு.சே.நாராயணன், அரும்பாவூர் கால்நடை உதவி மருத்துவர் மரு.இரா.விக்னேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.