கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தாத்தூர் டேங்க் வீதியில் இருக்கும் உன்னிகிருஷ்ணன் என்பவரை குடிபோதையில் உன்னிகிருஷ்ணன் மனைவியின் தங்கை கணவர் சசிகுமார் உன்னிகிருஷ்ணன் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார், இந்த சம்பவம் குறித்து ஆனைமலை காவல்நிலையா ஆய்வாளர் குமார் சம்பவ இடம் சென்று விசாரணை செய்து வருகிறார், போலீஸ் சார் விசாரனையில்
உன்னிகிருஷ்ணனும் மனைவியும் கடந்த ஐந்து வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இறந்து போன உன்னிகிருஷ்ணன் மனைவிக்கும் சசிக்குமாருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் உறவினர்கள் உன்னிகிருஷ்ணன் மனைவியை நேற்று சேர்த்து வைத்துள்ளனர் இதனால் ஆத்திரம் அடைந்த சசிகுமார் உன்னிகிருஷ்ணனுக்கு அதிக மது வாங்கி கொடுத்து கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார் என்பதும் தலைமறைவாக உள்ள சசிகுமாரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.