செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலியாகி உள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம்
மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆபிரகாம் (48) என்பவர் உயிரிழந்துள்ளார்.