திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் பதவி ஏற்றவுடன் பொதுமக்கள் புகார் தெரிவிக்க தனி செல்போன் எண் 9487464651 – என்ற எண்ணை அறிவித்தார்கள்.
மேற்படி எண்ணுக்கு பொதுமக்கள் கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,
புலிவலம் காவல் நிலையம்- பகலவாடி பகுதியில் வயல்காட்டில் கள்ளசாராய ஊரல் போட்டு அவ்வப்போது சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த லோகநாதன் வயது 50- என்பவரது இடத்தை சிறப்பு படையினருடன் நேரில் வந்து ஆய்வு செய்த மாவட்ட
காவல் கண்காணிப்பாளர் அங்கு வயல் காட்டில் சாராயம் காய்ச்ச வைத்திருந்த சாராய ஊரல் சுமார் 1150 லிட்டர், ஆறு பேரல்களை கண்டுபிடித்தார்.
மேலும் சிறிதளவு காய்ச்சிய கள்ளசாராயம் கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்படி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த லோகநாதன் கைது செய்யப்பட்டார்.
புகார்களுக்கு பிரத்தியோக செல் நம்பரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்த மூன்று நாட்களுக்குள் சுமார் 1200 லிட்டர் சாராய ஊரல் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் அனைத்து புகார்களுக்கும் 9487464651 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தி உள்ளார்கள்.