விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்ட நிலையில் எக்கியார் குப்பம் மீனவர்கள் கள்ளச்சாராயம் குடித்ததில் 9 பேர் பலியாகினர். அதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளசாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா சஸ்பெண்ட் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.