குடியரசு தினவிழாவையை ஒட்டி நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்துள்ளனர். சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற 31 பேரை திருச்சி திருச்சியில் 72 பேர் போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 280 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். இதேபோல் புறநகர் பகுதியில் முசிறி மற்றும் திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் திடீர் சோதனை செய்தனர். இதில் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 40 பேரை கைது செய்தனர். இவர்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 662 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் மணிகண்டம் நடுப்பாகலூர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த புதுச்சேரி மாநிலமதுபாட்டில்களட 180ஐயும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஜெயராமன் என்பவரை கைது செய்தனர்.