Skip to content
Home » சுனாமியில் இறந்தவர்களுக்கு……வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள் அனுசரிப்பு

சுனாமியில் இறந்தவர்களுக்கு……வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள் அனுசரிப்பு

  • by Authour

கிறிஸ்தவ மதத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் ஆண்டு தோறும் நவம்பர் 2-ம் தேதி கல்லறைத் திருநாள் அனுசரிக்கப்படுகிறது. உயிர் நீத்தவர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் தினமான இன்று நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது இஸ்ரேல் ஹமாஷ் போர் முடிவு பெற்று அமைதி திரும்ப வேண்டியும், போரினால் மாண்டவர்கள் மற்றும் இறந்த முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது .

அதனைத் தொடர்ந்து பேராலயம் முன் வேளாங்கண்ணியில் 2004ம் ஆண்டு சுனாமியால் இறந்தவர்களின் ஆன்மாவுக்காக பங்கு தந்தை அற்புதராஜ், பாதிரியார்கள் மற்றும் உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி மனமுருக பிரார்த்தனை செய்தனர்.

இதுபோல இன்று திருச்சி, தஞ்சை,  பெரம்பலூர்,  புதுக்கோட்டை, முசிறி என அனைத்து இடங்களிலும் கிறிஸ்தவர்கள் கல்லறை  தோட்டங்களுக்கு சென்று மறைந்த முன்னோர்கள் நினைவிடங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி, மாலை அணிவித்து   பிரார்த்தனை செய்து கல்லறை திருநாள் அனுசரித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *