Skip to content

கல்லறை திருநாள்….கோவையில் கல்லறையை அலங்கரித்து சிறப்பு பிரார்த்தனை…

  • by Authour

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் 2ம் தேதி கல்லறை திருநாள் கடைபிடிக்‍கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கல்லறை திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ மக்‍கள் தங்களது முன்னோர்களை நினைவு கூறும் வகையில் கல்லறையை சீரமைத்து அலங்கரிக்‍கும் பணியில் ஈடுபட்டு சிறப்பு பிரார்த்தனைகள் செய்வது வழக்கம்.

அந்த வகையில் கோவை திருச்சி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ.கல்லறை தோட்டத்தில் ஆயர் சாம் ஜெபசுந்தர் ஜெபத்துடன் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.இதில் கிறிஸ்தவ மக்கள் பலரும் தங்களது

குடும்பத்தினருடன் ,முன்னோர்களின் கல்லறையை சீரமைத்து அலங்கரித்து மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.தொடர்ந்து ஒருவருக்கொருவர் முன்னோர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *