கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்றுஒரே நாளில் கள்ளச்சாராயம் குடித்த பிரவீன், சுரேஷ், சேகர், சுரேஷ்( மற்றொருவர்) தனக்கொடி, புதுச்சேரி மாநிலம் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு இருந்த 15 பேரில் கிருஷ்ணமூர்த்தி, மணி, முருகன் மற்றும் இந்திரா என்ற பெண் உள்பட 9 பேர் பலியாகினர்.. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சுமார் 40 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் ஏன தகவல்கள் தெரிவி்க்கின்றன. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி எஸ்பி சமய்சிங் மீனா உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். புதிய எஸ்பியாக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் மாவட்டக்கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய கலெக்டராக எம்எஸ் பிரசாந்த் நியமிக்கப்பட்டுள்ளாார். சம்பவ இடத்திற்கு அமைச்சர்கள் ஏவ வேலு, மா. சுப்பிரமணியன் ஆகியோர் விரைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி சாராய சாவு 9.. எஸ்பி சஸ்பெண்ட், கலெக்டர் டிரான்ஸ்பர்..
- by Authour