கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை சிலர் குடித்துள்ளனர். அன்று இரவு அதில் பலரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சுமார் 80க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி ஜிப்மர், கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்நிலையில் விஷ சாராயத்துக்கு பலி எண்ணிக்கை தற்போது 26 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்கிற கண்ணுகுட்டி (49), போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் இருந்து 200 லிட்டர் விஷ சாராயம் கைப்பற்றப்பட்டு ஆய்வு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை தீர விசாரிக்கவும், மேல் நடவடிக்கை எடுக்கவும் சிபிசிஐடி விசாரிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் கள்ள சாராய விவகாரத்தின் எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி சமய் சிங் மீனா. மதுவிலக்கு அமலாக்கப் பிரிவை கவனித்த டிஎஸ்பி தமிழ்செல்வன். கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா. திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் பாண்டி செல்வி. திருக்கோவிலூர் எஸ்ஐ பாரதி ,எஸ்ஐ ஷிவ்சந்திரன், ரைட்டர் பாஸ்கரன், எஸ்எஸ்ஐ மனோஜ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
விஷ சாராய சாவு 26 ஆனது..சிபிசிஐடி விசாரணை, எஸ்பி உள்பட போலீசார் கூண்டோடு சஸ்பெண்ட்..
- by Authour