கரூர் அடுத்த ஆலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ராகுல் (வயது 14) 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
காலாண்டு பருவத் தேர்வு விடுமுறை தினம் என்பதால் சிறுவன் ராகுல் நேற்று தனது நண்பர்கள் இருவருடன் விளையாடச் சென்றுள்ளார் அப்போது அருகிலுள்ள ஆத்தூர், பெரும்பாறை என்ற இடத்தில் 16 ஆண்டுகளுக்கு முன் ராஜேந்திரன் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான கைவிடப்பட்ட பழைய கல்குவாரியில் தேங்கிக் கிடந்த தண்ணீரில்
குளிக்கச் சென்ற போது தண்ணீரில் மூழ்கி சிறுவன் ராகுல் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில்.
உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில் பழைய கல்குவாரியை சுற்றி கம்பி வேலி அமைக்கவில்லை எனவும், தோண்டப்பட்ட கல்குவாரியை மணல்களைக் கொண்டு மூடாததால் தண்ணீர் தேங்கியதாகவும் இதனால் சிறுவன் உயிரிழந்ததாகவும் இதனால் கல்குவாரி உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட உறவினர்கள் போராட்டம்