Skip to content

ஏர்-இந்தியா விமானத்தில் நவ.19ல் குண்டு வெடிக்கும்.. தீவிரவாதி மிரட்டல்

  • by Authour

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தடை செய்யப்பட்ட காலிஸ்தானி தீவிரவாத அமைப்பின் தலைவன் குர்பத்வந்த் சிங் பன்னு, வெளிநாட்டில் இருந்து கொண்டு வெளியிட்ட வீடியோ பதிவில், ‘டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வரும் 19ம் தேதி மூடப்பட்டிருக்கும். அந்த விமான நிலையத்தின் பெயரும் மாற்றப்படும்.

அதே நாளில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி நடைபெறும். வரும் 19ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும். அன்றைய தினம் குண்டு வெடிக்கும் என்பதால், உங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே அன்றைய தினம் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய வேண்டாம். அன்றைய தினம் உலகளாவிலான போராட்டம் நடக்கும்’ என்று கூறியுள்ளார். அமிர்தசரஸில் பிறந்த குர்பத்வந்த் சிங் பன்னு கடந்த 2019ம் ஆண்டு முதல் தேசிய புலனாய்வு அமைப்பால் (என்ஐஏ) தேடப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!