கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே அமைந்துள்ள சௌந்தராபுரம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் நேற்று காலை அக்னி நேர்த்திக்கடன் நடைபெற்றது .இதில் மத நல்லிணகத்துக்கு எடுத்துக்காட்டாக இஸ்லாமியர்கள் பங்கு பெற்றனர். அதைத் தொடர்ந்து இரவு மாரியம்மன் மற்றும் காளியம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கரகம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியை ஏந்தியவாறு ஊர்வலமாக நங்காஞ்சி ஆற்றுக்கு கொண்டு சென்று, முளைப்பாரியை ஆற்றில் விடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.