Skip to content

நாதகவில் இருந்து காளியம்மாள் விலகல்- தவெகவில் சேர்கிறார்

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் முக்கிய  மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர்  நாகப்பட்டினம் காளியம்மாள். இவர் அந்த கட்சியின் சார்பில்  வடசென்னை மக்களவை தொகுதியிலும், பூம்புகார் சட்டமன்ற  தொகுதி தேர்தலிலும்  போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.

இவரை  அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான், காளியம்மாள் ஒரு பிசிறு என திட்டிய  ஆடியோ வெளியானது. இதனால் அவர்  அதிர்ச்சி அடைந்து அந்த கட்சியின் தீவில் நடவடிக்கையில் இருந்து  விலகி காணப்பட்டார்.

இன்று நாதக கட்சிக்கு  முழுக்கு போட்டு விட்டார்.  அதைத்தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்   இத்தனை நாட்கள் உண்மையாய்,  உறவாய் பழகிய, பயணித்த  அத்தனை சொந்தங்களுக்கும் நன்றி.  நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதோடு, வருத்தங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். தமிழ் தேசியத்தை விதைக்கும்  விதைக்கும் வழியில் என பயணம் தொடரும் என  கூறி உள்ளாா்.

தமிழ் தேசியத்தை விதைக்கும்  வழியில் என் பயணம் தொடரும் என அவர் கூறி உள்ளதால்,  அவர் தவெகவில் சேர்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வரும் 26ம் தேதி மாமல்லபுரத்தில்  தவெக  2ம் ஆண்டு விழா நடக்கிறது. இதில்  காளியம்மாள் அந்த கட்சியில் சேர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!