இலங்கை பாராளுமன்றத்துக்கு கடந்த வாரம் தேர்தல் நடந்தது. இதில் அதிபர் அநுர குமார திசநாயகவின் கட்சி அபார வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இலங்கை பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தேர்வு இன்று நடந்தது. இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று பதவியேற்றார். அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது.