தமிழக அரசு சார்பில் நடைபெறும் கலைத்திருவிழாவில் திருச்சி, திருவெறும்பூர் ஒன்றிய அளவில் பள்ளி மாணவ- மாணவிகளை தேர்வு செய்ய மூன்று நாள் நடைபெறும் தகுதி சுற்று போட்டி காட்டூர் ஆதிதிராவிடர் நல பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் தொடங்கியது.
தமிழக அரசு கிராமப்புறத்தில் உள்ள பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் கலை திறனை ஊக்குவிக்கும் வகையில் இரண்டாவது ஆண்டாக தமிழக அரசு தமிழக முழுவதும் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு கலை திருவிழா என்ற பெயரில் அழகு கையெழுத்து ஆங்கிலம் மற்றும் தமிழ், ஓவியம், மனதில் பதிந்த இயற்கை காட்சி வரைதல், வண்ணம் தீட்டுதல், களிமண் சுதை வேலைப்பாடு, காய்கறிகளைக் கொண்டு சிற்பம், வாத்திய கருவி, நாட்டுப்புறப் பாடல், மெல்லிசை தனி பாட்டு, வில்லுப்பாட்டு உள்ளிட்ட 23 வகையான போட்டிகள் திருவெறும்பூர் ஒன்றியத்தில் உள்ள 19 அரசு நடுநிலைப்பள்ளி, 6 உயர்நிலைப் பள்ளி, 6 மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 31 அரசு பள்ளிகளில் கடந்த 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடந்தது.
இதில் பள்ளி அளவில் முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவ-மாணவிகள் ஒன்றிய அளவில் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை திருவெறும்பூர் அருகே காட்டூரில் உள்ள ஆதிதிராவிடர் பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெறுகிறது. அதன் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல் நாள் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவ -மாணவிகளின் தனித்திறன் போட்டிகள் நடைபெறுகிறது.
இதில் 436 மாணவ மாணவிகள் கலந்து கொள்கின்றனர் நாளை(19ம் தேதி மற்றும் 20ம் தேதி) 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு ஒரு குழுவாகவும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு குழுவாகவும் கும்மி நடனம், தனிநபர் நடனம், கிராமிய நடனம், நாடகம், தனிநபர் நாடகம், நகைச்சுவை மற்றும் பல குரல் பேச்சு உள்ளிட்ட
போட்டிகள் நடைபெறுகிறது. இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் மாணவ மாணவிகள் மாவட்ட அளவில் வரும் 26 ம் தேதியில இருந்து 28ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகள் கலந்து கொள்வார்கள். அதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வார்கள் அதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் மாணவ மாணவிகளை தமிழக பள்ளிகளில் துறை சார்பில் வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்
திருவெறும்பூர் ஒன்றிய அளவில் நடந்த தொடக்க விழாவில் பள்ளிகள் துறை சார்பில் காலை வல்லுனர்களாக மண்ணை அரங்கநாதன், அப்துல் குத்தூஸ், மனோகரன், பெற்றோர் ஆசிரியர் சங்க பிரதிநிதி நீலமேகம்ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று நாள் போட்டிகளை திருவெறும்பூர் வட்டார கல்வி அலுவலர்கள் ரஜினி பெஞ்சமின், ஜெஹ்ராபர்வீன் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜுலியான ஆகியோர் நடத்துகின்றனர். திருவெறும்பூர் ஒன்றியம் மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பினர் ஆசிரியர் பயிற்றுநர்கள்,
ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.