கரூர் மாவட்டம் க.பரமத்தி வட்டார அளவில் நடைபெறும் மாணவ மாணவிகளின் கலைத் திருவிழா நடைபெற்றது இதில் கும்மி, தனி நடனம், செவ்வியல், நாட்டுப்புற நடனம், தேவராட்டம், கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
இதில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கார்த்திக் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டனர். இப்போட்டிகளில் 18 நடுநிலை, 3 உயர்நிலை மற்றும் 7
மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பங்கு பெற்று தங்களது கலைத்திறமையை காட்டினர்.
இப்போட்டியில் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இந்நிகழ்ச்சியை அனைத்து விழாக் குழு அலுவலர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். கலை நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கநிலை )மணிவண்ணன், வட்டார கல்வி அலுவலர் அசோகன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.