புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியை . சட்டத்துறை அமைச்சர் எஸ்,ரகுபதி தொடங்கிவைத்தார், திமுக இலக்கிய அணி துணைத் தலைவர் கவிதைப்பித்தன் நடுவராக பொறுப்பேற்று விழாவை நடத்தினார்.
,முன்னதாக வடக்குமாவட்ட கலைஇலக்கியபகுத்தறிவு அணிஅமைப்பாளர்செந்தாமரைபாலு வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர்அரு.வீரமணி, சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா,வி.என்.மணி,இராம.செல்வராஜ் ,எம்.எம்.பாலு,மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர வட்டக் கழக. அணிகளின் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.