மதுரையில் புதுநத்தம் சாலையில் நவீன கட்டுமான அம்சங்களுடன் கூடிய பிரமாண்டமாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜூலை 15-ந்தேதி திறந்து வைத்தார். இந்த நூலகம் தற்போது மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து திருச்சி, கோவையில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110- விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக திருச்சியில் பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. திருச்சியில் டி.வி.எஸ். டோல்கேட் அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. முறையாக இதற்கான அனுமதி கிடைத்ததும் பணிகள் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.