தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , பின்னணிப் பாடகர் “கலைமாமணி” டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி, மதுரை, முனிச்சாலை சந்திப்பில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில்
அமைக்கப்பட்டுள்ள “கலைமாமணி” டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் திருவுருவச் சிலையை இன்று (16.8.2023) திறந்து வைத்து, அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.