கலைஞர் கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் புதிய பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என கடந்த வாரம் சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அந்த பல்கலைக்கழகத்திற்கான சட்ட முன்வடிவினை இன்று சட்டமன்றத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
கலைஞர் பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வரே இருக்க வேண்டும். அரியலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த பல்கலைகழகம் அமையும். இந்த பல்கலை கட்டுப்பாட்டில் 36 கலை அறிவியல் கல்லூரிகள் இடம் பெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
