கரூர் ஆண்டான்கோவில் மேற்கு ஊராட்சியில் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் சிறப்பு முகமை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார். முதல் கட்டமாக இன்று மாவட்டம் முழுதும் 390 இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மொத்தம் கரூர் மாவட்டத்தில் 583 இடங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெற திட்டமிடப்படுள்ளது.
கரூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக விண்ணப்பம் பெறும் பணி நடந்து வருகிறது. இதுவரை 90 சதவீதம் விண்ணப்பங்கள் பயனாளிகளுக்கு விநியோகிக்கும் செய்யும் பணி நடந்து முடிந்து விட்டது. பயோ மெட்ரிக் முறையில் விண்ணப்ப பதிவு ஏற்றம் செய்யப்பட்டு வருகிறது. பொது மக்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி பதிவேற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முகாமிலும் காலை 30 பேரும், மாலை 30 ம பேரும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யப்படுகிறது.
விண்ணப்பம் பெற்றதும் உடனே பயனாளிக்கு குறுந் தகவல் அனுப்பப்படும். விண்ணப்பதாரர் தகுதி உடையவரா? தகுதியற்றவரா? என்பது குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். ஒவ்வொரு இடத்திலும் 10 நாட்கள் இந்த முகாம்
நடத்தப்படும். பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்வதில் பொதுமக்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படுவதால் பணிகள் எளிமைப்படுத்தப்படுவதோடு, தவறுகள் எதுவும் நடந்திராத வகையில் அமையும் என்றார்.