திருவாரூரில் ரூ.12 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சகோதரி செல்வியுடன் இணைந்து திறந்து வைத்தார்.
தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் காட்டூரில் கருணாநிதி நினைவாக ரூ12 கோடியில் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. 7000 சதுர அடி பரப்பில் ரூ 12 கோடி செலவில் திருவாரூர் ஆழித்தேர் வடிவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. கோட்டத்தில் கருணாநிதி சிலை, முத்துவேலர் நூலகம் பழைய புகைப்படங்கள், திருமண மண்டபங்கள் உள்ளன. திறப்பு விழாவில் பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் பங்கேற்றுள்ளார். அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் பீகார் முதல்வரை வரவேற்றார். நாடாளுமன்ற குழு தி.மு.க தலைவர் .டி.ஆர்.பாலு, அமைச்சர் பெருமக்கள் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் .திருச்சி சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் கலைஞர் கோட்டத்தில் , 2 திருமண மண்டபங்கள் முத்துவேல் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞர் கோட்டத்தில் கருணாநிதியின் முழு உருவ சிலையும் நிறுவப்பட்டுள்ளது.
இவ்விழாவில் பீகார் துணைமுதல்வர் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது... பெண்களுக்கான அடிப்படை உரிமைகளுக்கு குரல் கொடுத்தது திமுக தான். கருணாநிதியின் அரசியல் வாழ்க்கை இளைஞர்களுக்கு ஊக்கம் தரக்கூடியது. சாதி ஒழிப்பு திமுகவின் முக்கிய கொள்கையாக உள்ளது. கருணாநிதி வகுத்து தந்த கொள்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்றார்.