Skip to content
Home » எம்பி கனிமொழி இல்லத்தில் கலைஞரின் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

எம்பி கனிமொழி இல்லத்தில் கலைஞரின் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

இன்று (03/06/2023), முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சிஐடி காலனியில் உள்ள திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. இல்லத்தில் திமுக தலைவரும்,தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திமுக பொதுச் செயலாளரும்,நீர்வளத் துறை அமைச்சருமான துரை முருகன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, திமுக தலைமைக் கழக முதன்மை செயலாளரும்,நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான

கே.என்.நேரு, திமுக துணைப் பொதுச் செயலாளரும், உயர் கல்வித் துறை அமைச்சருமான க. பொன்முடி, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் கலைஞரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர், மு.க ஸ்டாலின் அவர்கள் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் மற்றும் கணவர் அரவிந்தன் ஆகியோரின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!