கோவையில் சென்னை சில்க்ஸின் கே.கே.வி வென்ச்சர்ஸ் இனிவரும் காலத்திற்கு ஏற்பது போல் திரைப்படம் எடுக்க திட்டமிட்டுள்ளதாக இக்குழுமத்தின் தலைவர் டி.கே சந்திரன் தெரிவித்துள்ளார்.சிறந்த கல்வி குறித்து இயக்குனர் லெனின் இயக்கிய சிற்பிகளின் சிற்பங்கள் தேசிய விருது பெற்றது.
ஆசிரியர்களுக்கு பெருமையையும் அர்ப்பணிப்பையும் அளிக்கும் விதமாக கே.கே.வி மீடியா வென்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் லெனின் இயக்கத்தில் உருவான சிற்பிகளின் சிற்பங்கள் ஆவணப்படம் இந்தியாவில் சிறந்த கல்விக்கான திரைப்படம் என்ற தேசிய விருதை பெற்றுள்ளது.விழிப்புணர்வு,கலை,இலக்கியம், பல்துறைகள் சார்ந்த கருத்துக்களை வெகுஜன மக்களின் மனதில் பதிய வைக்கும் நோக்கில் ஆவணப்படங்கள்,குறும்படங்கள் தயாரிக்கப்படும் என கே.கே.வி மீடியா வென்ச்சர்ஸ் தெரிவித்துள்ளது.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சென்னை சில்க்ஸ் குழுமத்தின் தலைவர் டி.கே சந்திரன்.
கே.கே.வி குழுமம் 1962-ம் ஆண்டு மதுரையில் சாதாரணமான கைத்தறி நிறுவனமாக தொடங்கப்பட்டு அரசாங்கத்தை தாண்டி சமூக பங்களிப்போடு செயல்பட்டு வருகிறது.
கல்வி படித்த அடிப்படையில் தான் பெரிய நிறுவனத்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.கல்வி மற்றும் கலை தொடர்பாக சிந்தித்து இந்த திரைப்படத்தை எடுத்தாக கூறினார்.இத்திரைப்படத்துக்கு மூலதனமாக கொரோனா காலகட்டத்தில் சொந்தமாக ஒரு கேமரா வாங்கி கொடுத்ததாக தெரிவித்தார்.லட்சம்,கோடி போட்டு திரைப்படம் எடுக்கும் கட்டத்தில் ஆயிரம் கணக்கில் செலவு பண்ணி வெற்றி பெற்ற குறும்படம்.சமூகத்திற்கு நல்ல செய்தி சொல்வதற்காக தான் கே.கே. வி வென்ச்சர்ஸ் தொடங்கள்ளது என்று கூறினார்.தன்னுடைய வாழ்க்கை வரலாற்றில் ஒரு ஆசிரியர் இருந்தார்.அதே போல் ஒவ்வொருத்தர் வாழ்க்கையில் ஒருவர் மையப் புள்ளியாக இருப்பார் என்று கூறினார்.
ஆசிரியர் தொழிலை வைத்து தான் இந்த குறும்படம் எடுக்கப்பட்டதாகவும் இனிமேல் எடுக்கும் படங்கள் மக்களுக்கு ஒரு நல்ல செய்தி கொடுக்கும் படங்களாக இருக்கும் என கூறினார்.
சமுதாய பொறுப்புணர்ச்சி சார்ந்த படங்களை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.திரைப்படம் தயாரிப்பது லட்சியம் இல்லை மக்கள் ஏற்ற்வாரு நல்ல கருத்துகள் இருந்தால் அது குறித்து திரைப்படம் எடுக்கப்படும் என்று கூறினார்.மாதா,பிதா,குரு,தெய்வம் கூறுவார்கள் மாதா,பிதா, தெய்வத்தை பற்றி ஏற்கனவே படம் எடுத்து இருக்கிறார்கள்.நாங்கள் குருவை மையமாக கொண்டு படம் எடுத்துள்ளதாகவும் லாப நோக்கத்திற்காக படம் எடுக்கப் போவதில்லை சமூகத்தில் நல்ல கருத்து கொண்டு சேர்க்கும் நோக்கத்திற்காக மட்டுமே படம் இயக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.