சென்னை கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், சுமார் 1.22 மணி நேரம் வரை அருகருகே நின்று நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதில் சுமார் 1 மணி நேரம் இருவரும் அருகருகே அமர்ந்து கலை நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தனர். கவர்னர் ஆர்.என்.ரவி தலையில் தொப்பி அணிந்து வந்திருந்தார். அவரது மனைவி லட்சுமி ரவி அருகில் இருந்தார். இதேபோல் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் நிகழ்ச்சியை கண்டு களித்தார். 1 மணி நேரமாக அருகருகே அமர்ந்து நிகழ்ச்சியை பார்த்தனர். தமிழக சட்டசபையில் கவர்னர் பாதியிலேயே வெளியேறிய சம்பவத்துக்கு பிறகு 15 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இருவரும் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டு அருகருகே அமர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். கவர்னரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்முகத்துடன் வரவேற்று நிகழ்ச்சி முடிந்ததும் அதே இன்முகத்துடன் வழி அனுப்பி வைத்தார்.