தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது… மதுரையில் நடந்தது எழுச்சி மாநாடு அல்ல,பழனிச்சாமி கம்பெனிக்கு வீழ்ச்சி மாநாடு.முன்னாள் அமைச்சர்கள் பலரும் 15 முதல் 25 லட்சம் பேரை மாநாட்டுக்கு ஓட்டுவோம் என கூறினார்கள். ஆனால் அவர்களுடன் உள்ளவர்கள் என்னிடம்,மாநாட்டிற்கு பணமும்,வாகனமும் ஏற்பாடு செய்து ஒரு வாகனத்திற்கு 10 பேர் மட்டுமே வந்தனர். அதிகபட்சமாக இரண்டு முதல் இரண்டரை லட்சம் பேர் மட்டுமே கலந்து கொண்டிருப்பார்கள்.இதை ஒரு சைபர் சேர்த்து கூறியுள்ளார்கள். இதுதான் உண்மை. மதுரையில் உள்ளவர்களும்,பலதரப்பட்ட துறையில் உள்ளவர்களும்,பழனிச்சாமி கம்பெனி உள்ள சில நண்பர்களும் என கூறினர். புரட்சி என்ற வார்த்தைக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது. துரோகத் தமிழர் என்ற பட்டத்தை கொடுத்திருக்கலாம்.காலில் விழுந்து பதவி வாங்கிக் கொண்டு விட்டு, பதவி கொடுத்தவருக்கு துரோகம் செய்தவர். தன் ஆட்சி நீட்டிக்க காரணமாய் இருந்த பன்னீர்செல்வம் போன்றவர்களுக்கு துரோகம் செய்வது.துரோகத்தாலும்,தவறாக ஈட்டிய பண பலத்தாலும் கட்சியை கபளீகரம் செய்திருப்பது தான் சாதனை.
அதற்காக புரட்சி செய்தார் என கூற வேண்டும் என்றால் அது வெட்கக்கேடானது. மக்கள் ஸ்டாலின் கையில் ஆட்சியை கொடுத்ததை குறித்து வருந்துகின்றனர். பழனிச்சாமிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் எந்த வேற்றுமையும் இல்லை. இருவரும் ஹிட்லரின் இரண்டு சகோதரர்கள் போல உள்ளனர். இவர்களுக்கு மாற்று சக்தியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். பாஜகவுடன் உறவு அல்ல நண்பர்கள் சிலர் உள்ளனர். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். கூட்டணி இல்லாவிட்டாலும் தனித்து போட்டியிடுவோம். கூட்டணியின் அமைந்தால் தேசிய கட்சிகள் தலைமையில் தேர்தலை சந்திப்போம்.
தேர்தலுக்கான கூட்டணி என்பது யார் வரக்கூடாது என்பதற்காக தான். தமிழர்களின் ஜீவாதார பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவையே எதிர்த்து,காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் மதிக்காமல்,தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டோம்.அணை கட்டுவோம் என அகம்பாக்கத்தோடு கர்நாடகா உள்ளனர்.இப்படி இருக்கும் பட்சத்தில் தமிழக முதல்வர் வேகமாக செயல்பட்டு,மத்திய அரசுடன் சேர்ந்து,நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மக்கள் ஊழலுக்கு எதிராக வாக்களித்து வருகின்றனர்.
மத்திய அரசு ஊழல் விவகாரத்தில் தவறு நடந்திருக்கும் பட்சத்தில் மக்கள் அதற்கு தீர்வு அளிப்பார்கள்.ஓபிஎஸ் நானும் தற்போது இணைந்து போராட்டத்தில் கலந்து கொண்டோம். வருங்காலம் குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம்.நீட் தேர்வை மற்ற மாநிலங்கள் ஏற்றுக் கொண்டு விட்டது.தமிழகத்தில்,நீட் தேர்வை ரத்து செய்வதற்காக அனைத்து கட்சிகளும் முயற்சி செய்ய வேண்டும்.நாங்களும் எடுத்து வருகிறோம்.அதே நேரத்தில் ஒரே கையெழுத்தில் நீட்டை ரத்து செய்து விடுவோம் என முதலில் கூறியதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.