தமிழ்நாடு அமைச்சரவையில் 2 நாட்களுக்கு முன்புதான் அதிரடி மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சரவையில் இருந்து நாசர் விடுவிக்கப்பட்டு டி.ஆர்.பி ராஜா சேர்க்கப்பட்டார். தமிழ்நாடு நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டார்.
அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மாற்றங்கள் நடந்து 2 நாட்களில் தமிழக அரசின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
குறிப்பாக சென்னை மாநகாரட்சி ஆணையராக ராதாகிருஷ்னன் நியமனம் செய்யப்பட்டார். மாநகராட்சி ஆணையரக இருந்த சுகாதாரத்துறை செயலாளராக ககன் தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளராக ககன் தீப் சிங் பேடி சென்னை தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றார்.