அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் மறைந்த ஜெயங்கொண்டம் எம்எல்ஏவும், மாநில வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி ஜெ.குருவின் 63 -வது பிறந்தநாளை வன்னியர் ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கிணற்றில் இருந்து புனித நீர்
எடுத்து வரப்பட்டு அவரது நினைவிடத்தில் யாகம் வளர்க்கப்பட்டது. இதனையடுத்து காடுவெட்டி குரு அடக்கம் செய்யப்பட்டுள்ள சமாதி முன்பு புதிய மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான பணிகளை அவரது மகனும் மாவீரன் மஞ்சள் படை அமைப்பின் தலைவருமான குருகனலரசன் தொடங்கி வைத்தார். இதில் அரியலூர் மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாவீரன் மஞ்சள் படை இயக்கத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
மாவீரன் மஞ்சள் படை நிறுவனத் தலைவர் குருகனலரசன் அளித்த பேட்டியில் அடுத்த ஆண்டு மாவீரன் பிறந்த நாள் அன்று மணிமண்டபம் திறக்கப்படும் வரும் பாராளுமன்ற தேர்தலில் எங்கள் சமூகத்தின் மக்களுக்காக எந்த கட்சி போராடுகிறதோ? அந்த கட்சிக்கு ஆதரவு தருவோம் என இவ்வாறு அவர் கூறினார்.