கடந்த 2022-ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கடைசி விவசாயி. இந்த திரைப்படத்தினை இயக்குனர் எம்.மணிகண்டன் என்பவர் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தை இயக்கியதற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டிருந்தது. எம்.மணிகண்டன் குற்றமே தண்டனை, காக்கா முட்டை உள்ளிட்ட படங்களை இயக்கவும் செய்து இருக்கிறார்.
இயக்குனர் எம்.மணிகண்டன் தனது குடும்பத்துடன் திரைப்படங்களை இயக்குவதன் காரணமாக சென்னையில் வசித்து வருகிறார். ஆனால், அவருடைய சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தான். அங்கு தான் அவருடைய வீடு இருக்கிறது. ஆனால், தொழில் காரணமாக தற்போது சென்னையில் அவர் வசித்து வருகிறார்.
இருப்பினும் எம்.மணிகண்டன் பொருட்கள் மற்றும் பணங்கள் விருதுகள் ஆகியவற்றை உசிலம்பட்டியில் இருக்கும் வீட்டில் வைத்திருந்துள்ளார். வீட்டை கண்காணிப்பாக பார்க்கவேண்டும் என்பதால் எம்.மணிகண்டன் ட்ரைவர்கள் தினமும் வீட்டை பார்த்துவிட்டு நாய்க்கு சாப்பாடு போட்டு கண்காணித்து வந்துள்ளனர்.
இதனையடுத்து, நேற்று வழக்கம் போல் வீட்டிற்கு சென்று பார்க்கையில் வீடு திறந்து கிடைத்ததை பார்த்து பதறி போன ட்ரைவர் உடனடியாக இயக்குனர் எம்.மணிகண்டனிடம் தகவலை தெரிவித்துவிட்டு போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக உசிலம்பட்டி போலீசார் விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் கடைசி விவசாயி திரைப்படத்திற்காக பெற்ற இரு தேசிய விருதுக்கான வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் லட்சம் ரூபாய் ரொக்கம், 5 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. மேலும், இயக்குனர் மணிகண்டன் அவரகள் தனது வீட்டிற்கு வந்து பார்த்தாலே வேறு என்னென்ன பொருட்கள் காணாமல் போயிருக்கிறது என்பது குறித்து தெரிய வரும்.