Skip to content
Home » சுதந்திர தினத்தன்று… கச்சதீவில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்.. திருச்சியில் அர்ஜூன் சம்பத் மனு..

சுதந்திர தினத்தன்று… கச்சதீவில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்.. திருச்சியில் அர்ஜூன் சம்பத் மனு..

  • by Senthil

இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன்சம்பத் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமியிடம் மனு அளித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்… சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கொள்ளிடம் ஆற்றில் சிறிது காலத்திற்கு முன் கட்டப்பட்டிருந்த தடுப்பணை உடைந்துள்ளது, இதேபோல் அங்கு இருந்த உயர் மின்சார கோபுரம் தூணும் சரிந்துள்ளது, 6000 கன அடி தண்ணீர் வீணாக செல்கிறது. , உடனடியாக கொள்ளிடம் ஆற்றை சீரமைத்து வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பணை கட்டப்பட வேண்டும்,

திருச்சி மாவட்டத்தில் உள்ள செந்துறை கிராமத்தில் வக்பு சொத்து என்று அறிவிக்கப்பட்ட இடத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் பத்திரம் பதிவு செய்ய எந்த தடையில்லை என அவசர அவசரமாக அறிவித்துள்ளார். அது வக்பு போர்டு சொத்து என தீர்மானம் வரவில்லை, ஆனாலும் கடந்த 5வருடமாக அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனை சரி செய்வதற்காகத்தான் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது.
உடனே மாவட்ட ஆட்சியர் தடை இல்லை என்று அறிவித்துள்ளார். அது வக்பு சொத்து இல்லை என அறிவிக்க வேண்டும். சட்ட நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
கச்சத்தீவில் நமது தமிழக மீனவர்கள் அங்கு மீன் பிடிக்க, வலைகளை உலர்த்த, கோயில் விழா நடத்த தேசிய கொடி ஏற்ற எந்த தடையும் கிடையாது. எனவே வருகிற சுதந்திர தினத்தன்று கச்சத்தீவில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மூலம் மனு தமிழக முதலமைச்சருக்கும் தமிழக காவல்துறை தலைவருக்கும் மனு அளித்துள்ளோம் இதன் மூலம் நமது உரிமை நிலைநாட்டம் முடியும் என தெரிவித்தார். பேட்டியின் போது மாநிலத் துணைத் தலைவர் மாரி மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!