தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் சரகம் ஓலைப்பாடி கிராமத்தில் நாளை மக்கள் நேர்காணல் முகாம் நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளதாவது …
பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்த பொருட்டு மக்கள் நேர்காணல் முகாம்” என்ற திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் 2வது புதன்கிழமை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை புதன்கிழமை 20ம் தேதி பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் சரகம், ஓலைப்பாடி கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடக்கிறது. எனவே இந்த நேர்காணல் முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.